வியாழன், 13 பிப்ரவரி, 2014

இஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வெளியீடு

கோலாலம்பூர் -டிச-3 இப்சி(ipci - islamic propagation centre internationial ) என்ற அமைப்பு ஷேய்க்.அஹ்மத் ஹுசைன் தீதாத்(ஜூலை 1918-ஆகஸ்ட் -8,2005),குலாம் ரசூல் வென்கர் மற்றும் தாஹிர் ரசூல் ஆகியோரால் 1957-இல் வட ஆப்ரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது .அஹ்மத் தீதாத் அவர்கள் இந்தியாவில் பாம்பே- சூரத் பகுதியில் இருந்த தட்கேஷ்வர்(பிரிட்டிஷ் ஆட்சி காலம்) என்ற ஊரில் 1918-இல் பிறந்து பிறகு தன்னுடைய 9-வது வயதில் வட ஆப்ரிக்காவிற்கு குடிபுகுந்தார்.

வியாழன், 14 நவம்பர், 2013

ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ. வேட்புமனு தாக்கல்! ஆயிரக்கணக்கானோர் மாபெரும் பேரணி!



ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கலின் போது ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

வட மாநிலங்களில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தல்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கு கோட்டா, காமன், பண்டி ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்களும், ஆதரவாளர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
வடக்கு கோட்டா சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷபி வேட்புமனு தாக்கல் செய்தார். பெரும்பாலான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற இவர், அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்டவர். இவருடைய வேட்புமனு தாக்கலில் பெரும்பாலான இளைஞர்கள் கலந்து கொண்டு பேரணி நடைபெற்றது.
பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழும் காமன் சட்டமன்ற தொகுதியில் ஹபீஸ் மன்சூர் அலீ கான் போட்டியிடுகிறார். இவருடைய வேட்புமனு தாக்கலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து பாத யாத்திரையாக சென்றனர்.
ஹபீஸ் அலீ கான் அந்த தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சமூக ஆர்வலர். பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகித்து, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வருபவர்.
இதற்கு முன்பு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ.வில் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்பொழுது ஜம்இய்யத் உலமா இ ஹிந்தின் ராஜஸ்தான் மாநில செயலாளராக இருக்கிறார். எஸ்.டி.பி.ஐ.யில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஆதரவாளராக இருந்து, தற்பொழுது கட்சியில் தேசிய செயலாளராக செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்டி சட்டமன்ற தொகுதியில் பேட்டியிடும் மொய்னுதீன் சாஹர் சமூக ஆர்வலர். இவருடைய வேட்புமனு தாக்கலின் போது அதிகமான இளைஞர்கள் உட்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நீண்ட பேரணியாக சென்று இவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாபரி மஸ்ஜித் வரலாறு! -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு!


இளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி

பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக இன்றைய தலை முறைக்கும் வளரும் இளம் தலைமுறைக்கும் இந்த ஆவணத்தை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

அதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் ஆவண படம் (DocumentaryFilm) அறிமுகப்படுத்த இருக்கிறது ஆகவே முன்பதிவு செய்வீர்.

ஒரு CD யின் விலை ரூ.50 மட்டுமே.

தொடர்புக்கு:
A.அபுபக்கர் சித்தீக் -9566691316
M.Y.அப்பாஸ்-            9787459171

சனி, 29 டிசம்பர், 2012

பதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல


gj;H vd;wTlNd 313 epuhAjghzpfs; gyk; nfhz;l 1000 ,uhZtj; JUg;Gf;fis ntw;wpthif #ba tPu tuyhW jhd; epidTf;F tUfpwJ. K];ypk;fs; gj;Ug; Nghiug; ghHf;Fk; xU kfj;Jtkhd ghHit ,J. ,J jtwy;y. vdpDk; gj;NuhL ghHitia epWj;jp tplhky; mjw;F Kw;gl;l gjpide;J tUlq;fisAk; NrHj;Jg; ghHj;jhy; ntw;wpapd; ,ufrpaq;fs; vq;Nf ,Uf;fpd;wd vd;gjid ed;F Ghpe;J nfhs;syhk;.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

ஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்


அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து,

புதன், 26 டிசம்பர், 2012

காஸா – இரத்தம் சிந்தும் பூமி


புனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின.இன்றைய இஸ்ரேலின் குடிமக்களில் 80 சதவீதமானோர் வந்தேறு குடிகளாவர் இதனால் பலஸ்தீனர்களின் பூமி பறிபோனது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிர்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. வளைகுடாப் பிராந்தியத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் இலட்சிய இலக்காகும். அண்மைக் காலமாக ஹமாஸ்;

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? - 4


தாங்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று இந்துககள் சொன்னார்களா? நம்ப முடியவில்லையே! அவர்களுக்கு இதில் என்ன லாபம்?

இன்றைய தூஆ



اَللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

செவ்வாய், 25 டிசம்பர், 2012

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு


மூன்று நாட்கள் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுவில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .அல்ஹாம்துலில்லாஹ்! அல்லாஹ் அவர்களுக்கு பூரண உடல் நிலையையும் முஸ்லிம் சமுதாயத்தை முன்ணேற்றுவதற்கு ஆற்றலையும் வழங்ககுவனாக!

போன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) ?


இந்துக்களின் இராணுவ குணத்தை மீண்டும் உயிர் தந்து எழுப்பிட வேண்டும். இந்துக்கள் தங்கள் தாய் நாட்டின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்றிடச் செய்திட வேண்டும். அவர்களை சனாதன தர்மத்தில் பயிற்றுவித்திட வேண்டும். அவர்களுக்கு தேசியப் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, இவற்றின் கலை மற்றும் விஞ்ஞானப் பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.” ( AIM OF CENTRAL HINDU MILITARY EDUCATION SOCIETY NMML. MUNJE PAPERS; SUBJECT files N: 24.1932-36 = ஆதாரம் மத்திய இந்து இராணுவ கல்விச் சங்கத்தின் இலட்சியம். மூஞ்ஜே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.24,1932-36.) இந்தப் பயிற்சியில், சுட்டு, கொலைகளைச் செய்யும் விளையாட்டில் வெற்றிகளை ஈட்டிடும் இலக்குகளை நோக்கி நமது பையன்மார்களுக்கு பயிற்சி தந்திட வேண்டும். இந்தக் கொலை செய்யும் விளையாட்டுகளில் அவர்கள் முடிந்த அளவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்திட வேண்டும். எதிரிகளில் மடிந்தவர்களும் நொடிந்தவர்களும் பிணக்காட்டின் கோலங்களாகக் காட்சித் தந்திட வேண்டும். (Source: Preface to the scheme of the central Hindu Military Society, And its Military School. NMML: MUNJE PAPERS. Subject files : N:25.1935) ஆதாரம்: மத்திய இந்து இராணுவப்பள்ளி சங்கத்திற்கான திட்டங்களின் முன்னுரையிலிருந்து மூஞ்சே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.25:1935.இப்படி சுட்டுக் கொலை செய்யும் விளையாட்டை இந்து இளைஞர்களுக்குக் கற்றுத் தந்திடும் கல்லூரி மூன்று இந்தியாவில் பீடு நடை போட்டு வருகின்றன. இதையே இந்துத்துவவாதிகளின் சொற்களால் கூறினால் “இந்துக்களை இராணுவ மயமாக்கிடும் கல்விக் கூடங்கள்”, இராணுவத்தை இந்து மயமாக்கிடும் கல்விக்கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்..

வியாழன், 20 டிசம்பர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? - 3


பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள் காலத்தில் இஸ்லாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இஸ்லாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக் கூட  இருந்திருக்கிறார்களே!

புதன், 19 டிசம்பர், 2012

எது சுதந்திரம் ?


மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?) சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.
  • கருத்துரிமை,    பேச்சுரிமை, 
  • அரசியல் உரிமை,    சமய உரிமை